வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, April 9, 2010

காதல் கடவுள்

காதலும்
கடவுள்போல்
முழுசாய் புரிந்தோர்
எவருமில்லை ....

காதலும்
கடவுள்போல்
எதிர்ப்பு ஆதரவு
எப்போதுமுண்டு ....

காதலும்
கடவுள்போல்
உணரத்தான்
முடியம் ...

காதலும்
கடவுள்போல்
இதற்குமுன்
எல்லோரும் சமம் ..


காதலும்
கடவுள்போல்
அடைவது எளிதில்லை ...
காதலும்
கடவுள்போல்
அடைதோர் சிலரே ....


காதலும்
கடவுள்போல்
கல்லானதுமுண்டு ...


காதலும்
கடவுள்போல்
இல்லவே இல்லை
என்பர் சிலர் ...
காதலும்
கடவுள்போல்
ஆக்கவும்
அழிக்கவும்
செய்யும் .....

6 comments:

  1. கொஞ்சம் உரைநடையா இருக்கு..:)
    கலக்குங்க

    ReplyDelete
  2. காதலையும் கடவுளையும் Compare பண்ணிய உமக்கு "கவிக்கொம்பன்" என பட்டம் கொடுக்கலாம்!!

    ReplyDelete
  3. //காதலும்
    கடவுள்போல்
    ஆக்கவும்
    அழிக்கவும்
    செய்யும் .....//


    உண்மை .வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கடவுள் எங்கு இருக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை ஆனால் உங்களின் கவிதையில் நிறைய இடங்களில் வார்த்தைகளாக இருக்கிறார் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. காதலும்
    கடவுள்போல்
    இல்லவே இல்லை
    என்பர் சிலர் ...

    இந்த சிலரில் நானும் ஒருவன்...கடவுளா மனிதமா என்றால் நான் மனிதன் பக்கம் தான். இது ஒரு சிறிய ஒப்பிடே... நன்றி...

    ReplyDelete
  6. மதுரை சரவணன் நன்றி.

    ReplyDelete